குழந்தையே பிறக்காததால் இரட்டையர்களை தத்தெடுத்த தாய்: மறுநாளே காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த அலி சாண்டர்ஸ் என்கிற தாய் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், 2012ம் ஆண்டு என்னுடைய கல்லூரி காதலன் மைக்கேலை நான் திருமணம் செய்துகொண்டேன்.

குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எனக்கு அதிக ஆசை. ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் கருத்தரிக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்குமே குறைபாடு இருப்பது தெரியவந்தது.

எங்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவர், செயற்கை கருத்தரிப்பின் மூலமாக மட்டுமே நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டார்.

இதனால் பெரும் மனவேதனை அடைந்தேன். செயற்கை கருத்தரிப்பு அதிகம் தோல்வியில் தான் முடியும் என என்னுடைய தோழி கூறியதால், அதனை விடுத்தது தத்தெடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

சமூகநல மையத்தை அணுகி கோரிக்கை வைத்தோம். சில நாட்கள் கழித்து அவர்கள் எனக்கு போன் செய்தார்கள். குறைமாத இரட்டை குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம் என எங்களிடம் கூறினார்கள். உடனடியாக என்னுடைய கணவருடன் அங்கு சென்று பார்த்தோம். அவை அழகாக இருந்தது.

அதற்கான சட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். நாட்கள் கடந்தோடின. அடிக்கடி அந்த குழந்தைகளை நேரில் சென்று பார்த்து வந்தோம். 2014ம் ஆண்டு குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ள எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தோம். மைக்கேல் மற்றும் என்னுடைய பெற்றோர்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. மறுநாளே நான் கருத்தரிப்பது தெரியவந்தது. உடனே அந்த இரட்டை குழந்தைகளை திருப்பு அனுப்பி விடலாம் என என்னுடைய கணவர் கூறினார்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த குழந்தைகளை என்னுடைய கைகளில் இருந்து தூக்கியபோது கதறி அழுதேன். ஒரு கட்டத்தில், தற்கொலை பற்றி கூட சிந்தித்தேன்.

எனக்கு இப்பொழுது மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இருந்தாலும் நான் அந்த குழந்தைகளை நினைத்து அடிக்கடி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன்.

எங்கேயாவது இரட்டை குழந்தைகளை பார்த்தால், நான் தவறவிட்ட அந்த குழந்தைகளாக இருப்பார்களோ என்று தான் தோன்றுகிறது. என்றாவது ஒருநாள் அந்த குழந்தைகள் நிச்சயம் என் வீட்டு கதவை தட்டுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்