மோசமான வழியில் சம்பாதித்து வந்த தாய்: இடைஞ்சலாக இருந்ததால் குழந்தைகளுக்கு இழைத்த கொடுமை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
373Shares

ஒன்லைனில் தான் சந்திக்கும் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது, அவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களை அனுப்புவதன் மூலம் வரும் பணத்தில் வாழ்ந்து வந்த ஒரு பிரித்தானிய பெண், தான் இஷ்டம்போல் வாழ்வதற்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார்.

Warwickshireஐச் சேர்ந்த Louise Porton (23) என்னும் அந்த பெண், தனது குழந்தைகளில் ஒன்றை கொலை செய்வதற்கு முன், களங்கமில்லா அந்த பிஞ்சுக் குழந்தையை அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

Porton அந்த குழந்தைகளில் மூத்தவளான Lexi Draperஐ தலையணையை முகத்தில் அழுத்திக் கொலை செய்துள்ளார்.

குழந்தையை அடக்கம் செய்யும் இடத்திற்கு சென்றிருந்த Porton, யாரோ ஒரு ஆணுடன் தொலைபேசியில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை அங்குள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின் Porton தனது இரண்டாவது குழந்தையான 16 மாதக் குழந்தை Scarlett Vaughanஐ கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

Porton தான் தங்கியிருந்த ஹொட்டல் ஒன்றிலிருந்து குழந்தை Scarlettஐ தூக்கிக் கொண்டு கேஸுவலாக நடந்து வரும் காட்சி CCTV கெமராவில் இடம்பெற்றுள்ளது.

அந்த குழந்தை அப்போதே இறந்திருக்க வேண்டும் என பொலிஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

அதே நாளில் எதுவும் நடவாததுபோல, தனது காரில் அவர் எரிபொருள் நிரப்பும் காட்சிகளும் சிக்கியுள்ளன.

அப்போது இறந்து கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே இறந்துபோன Scarlett காரின் பின் பக்க இருக்கையில் கிடத்தப்பட்டிருந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

ஒரு முறை Lexi உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கழிவறையில் Porton தன்னை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது அவரது மொபைல் போனை பொலிசார் கைப்பற்றியதையடுத்து தெரியவந்துள்ளது.

அதே போல், மூக்கடைப்பு இருக்கும்போது ஒருவரின் வாயை டேப்பால் அடைத்துவிட்டால் உயிர் போய் விடுமா?

தண்ணீரில் மூழ்கிய எவ்வளவு நேரத்திற்குப்பின் ஒருவரை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்ய வைக்க முடியும்?

இறந்து எவ்வளவு நேரத்தில் ஒருவரின் உடல் கழுத்து வரை குளிர்ந்து போகும்? இறந்ததும் நிகழும் ஐந்து அசாதாரண நிகழ்வுகள் ஆகிய விடயங்களை இணையத்தில் தேடியுள்ளார் Porton.

அத்துடன் அவரது குழந்தைகள் இருவரும் எப்போதும் அவரது வீட்டு உரிமையாளரின் வீட்டில்தான் இருக்கும் என்றும், அவர்தான் அந்த குழந்தைகளை பெரும்பாலான நேரங்களில் கவனித்துக் கொள்வார் என்றும், Porton முடிந்த வரையில் தனது குழந்தைகளுடன் இருப்பதை தவிர்க்கவே பார்ப்பார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே தனது மோசமான வாழ்வுக்கு இடைஞ்சலாக இருந்ததால்தான் Porton குழந்தைகளை கொன்றுள்ளார் என விசாரணையில் முடிவாகியுள்ள நிலையில், இன்று அவருக்கு Birmingham Crown நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்