லண்டனில் கோடிக்கணக்கில் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஆனாலும் பிச்சைக்காரர்களுடன் வசித்த அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் அந்த பணத்தை பெற முடியாமல் தவித்து வரும் நபர் மீது வேறு ஒரு நீதிமன்ற வழக்கு பாய்ந்துள்ளது.

Bolton நகரை சேர்ந்தவர் மார்க் குட்ரம் (36). இவர் மீது சில திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் அதற்காக முன்னர் சிறை தண்டனைகளை அனுபவித்துள்ளார்.

இந்நிலையில் மார்க் தனது நண்பர் வாட்சனுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கினார். இந்த டிக்கெட்டுக்கு £4 மில்லியன் பரிசு விழுந்தது.

ஆனாலும் அவர்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை, காரணம் அந்த டிக்கெட்டை டெபிட் கார்டு மூலம் தெற்கு லண்டனில் உள்ள கடையில் மார்க் வாங்கினார்.

அந்த டெபிட் கார்டை இருவரும் யாரிடம் இருந்தோ திருடினார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து லொட்டரி நிறுவனம் அவருக்கு தரவேண்டிய பரிசு தொகையை நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் அவர்கள் சாலையில் பிச்சைகாரர்களுடன் வசித்து வருவதாக தெரியவந்தது.

இது தொடர்பாக வாட்சனும், மார்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இப்படி ஏற்கனவே பல பிரச்சனையில் இருவரும் உள்ள நிலையில் வாட்சன் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

கடந்த மாதம் இரவு ஒரு உணவகத்துக்கு சென்ற வாட்சன் அங்கு பரிமாறப்பட்ட உணவு பிடிக்கவில்லை என கூறி அதை உணவக உரிமையாளர் ஓலிவர் மீது வீசியெறித்து அவரை அடித்துள்ளார்.

இதோடு உணவு சாப்பிட்டுவிட்டு கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்கும்படி கேட்டு சண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக ஓலிவர் அளித்த புகாரின் பேரின் பொலிசார் வாட்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் வாட்சனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அவருக்கு £200 அபராதம் விதித்துள்ளது.

அடிக்கடி இப்படி எதாவது குற்றச்செயலில் ஈடுபடுவதால் அவருக்கு கிடைக்க வேண்டிய லொட்டரி பரிசு தொகை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்