பிரித்தானிய பிரதமரின் காதலிக்கு ஏற்பட்ட அவமானம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

போரிஸ் ஜான்சன் பிரித்தானிய பிரதமராவதற்கு முன்பே அவருடன் சண்டையிட்டு பொலிசார் குவியும் அளவுக்கு அவமானத்தை ஏற்படுத்திய அவரது காதலியால், பிரதமரான பின்னர் மீண்டும் ஒரு அவமானம் ஏற்பட்டுள்ளது.

இம்முறை அமெரிக்கா அதைச் செய்துள்ளது. அதாவது பிரபல நாடாகிய பிரித்தானியாவின் பிரதமரின் காதலிக்கு, அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலியாகிய கேரி சைமண்ட்ஸ் (31).

முன்பொருமுறை, கிழக்கு ஆப்பிரிக்க நாடாகிய Somaliland என்னும் நாட்டுக்கு, தனது தோழியும், பெண்ணுறுப்புச் சிதைப்புக்கு எதிராக போராடுபவருமான Nimco Ali என்பவருடன் சென்றிருந்தார் கேரி.

Somaliland, சோமாலியா நாட்டிலிருந்து பிரிந்து சென்ற ஒரு நாடாகும். அந்த நாட்டுக்கும் பிரித்தானியாவுக்கும் தூதரக உறவும் உள்ளது.

ஆனால், சோமாலியாவுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு, Somalilandஉடன் உறவுகள் இல்லை.

அமெரிக்கா செல்வதற்கான Esta விண்ணப்பத்தில், நீங்கள் ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா அல்லது ஏமனுக்கு 2011, மார்ச் 1க்கு பிறகு போயிருக்கிறீர்களா? என்ற ஒரு கேள்வியே உள்ளது.

அந்த கேள்விக்கு ஆம் என்று பதிலளித்தால், உங்கள் Esta விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

எனவே அமெரிக்கா செல்வதற்கான கேரியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என நம்புவதாக தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்