அரச குடும்பத்தில் ராணி அதிகம் நம்புவது யாரை தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய ராணியின் நான்கு குழந்தைகளும் எட்டு பேரக்குழந்தைகளும் அரச கடமைகளில் தங்களால் முடிந்த பங்கை செய்து வருகின்றனர்.

தற்போது ராணி 93 வயதை அடைந்துவிட்டதால் பல்வேறு விடயங்களில் அவருக்கு மற்றவர்களின் ஆதரவுகள் தேவைப்படுகிறது.

அவர் தன்னை சுற்றியுள்ள நேரடி உறவினர்கள் மட்டுமில்லாது, இளவரசிகள் கேட் மற்றும் மேகன் ஆகியோர்களையும் நம்பி இருக்கிறார்.

ஆனால் இவர்கள் அனைவரையும் விட, ராணி குடும்பத்தில் உள்ள மற்ற ஒரு நபருடன் தான் அதிக நேரத்தை செலவிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சான்ட்ரிங்ஹாம் அல்லது பால்மோரலில் இருந்து தேவாலயத்திற்கு செல்லும் போது தன்னுடன் காரில் இணையுமாறு சோபியை பலமுறை ராணி கேட்பார் என்று ஒரு அரச வட்டாரம் கூறுகிறது.

சோபி இளவரசர் எட்வர்டை திருமணம் செய்த பிறகு அரச பணிகளில் ஈடுபடுவதற்கு எதிராக முடிவெடுத்தார். அதற்கு மாறாக மக்கள் பணிகளில் ஈடுபட முயன்றார்.

நம்ப முடியாத வகையில் இளவரசி கமிலா மற்றும் கேட் ஆகியோரை விட ராணி பெரிதும் சோபியை தான் நம்புகிறார் என கூறப்படுகிறது.

அவரை தன்னுடைய மற்றொரு மகள் போலவும், தனக்கு நெருக்கமானவர் போலவும் ராணி நடத்துவதாக தெரியவந்துள்ளது.

இதேபோல ராணியை தவிர்த்து, இளவரசி மேகனுக்கும் சோபி நல்ல ஒரு கூட்டாளராகவும் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டியாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்