பிரித்தானிய நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தேர்வு: கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற உறுப்பினர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடுமையான போட்டிக்கு நடுவில், துணை சபாநாயகர்களாக இருந்தவர்களில் ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

லேபர் கட்சியைச் சேர்ந்த Sir Lindsay Hoyle தன்னைத் தொடர்ந்து வந்த Chris Bryantஐ தோற்கடித்து சபாநாயகராகியிருக்கிறார்.

Sir Lindsay Hoyleக்கு 325 நாடாளுமன்ற உறுப்பினர்களும் Chris Bryantக்கு 213 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட Sir Lindsay Hoyleஐ சக நாடாளுமன்ற உறுப்பினர்கள். தரதரவென இழுத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். அப்படி அவரை இழுத்து வந்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது.

சபாநாயகரை அவரது சகாக்கள் தரதரவென இழுத்து வருவது ஒரு பாரம்பரியமாகும். ஏனென்றால், ஒரு காலத்தில் சபாநாயகர் பதவி வகிப்பது மிகவும் அபாயகரமான ஒன்றாக கருதப்பட்டது.

நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை மன்னருக்கு தெரிவிப்பது சபாநாயகரின் கடமையாகும்.

ஆனால், எப்போதுமே சபாநாயகரால் மன்னர் அல்லது மகாராணி, யார் பதவியிலிருக்கிறாரோ அவருக்கு, நல்ல செய்தியை மட்டுமே கொடுக முடியாது.

அப்படி மோசமான செய்தியை கொடுத்த சபாநாயகர்கள் சிலர், மன்னர் அல்லது மகாராணியாரின் கோபத்துக்கு ஆளாகி கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு.

ஆகவேதான், சபாநாயகராக தேர்வு செய்யப்படுபவர் தனது இருக்கைக்கு செல்ல சற்று தயங்க, அவரை அவரது சகாக்கள் அவரை தரதரவென இழுத்துச் செல்வார்கள். மக்களிடையே கொஞ்சம் மரியாதையை இழந்துபோன நமது நாடாளுமன்றத்தின் பெருமையை மீட்டுக்கொடுக்க, தம்மால் இயன்றதைச் செய்ய தயாராக இருப்பதாக புதிய சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள Sir Lindsay Hoyleக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் Boris Johnson, நாடாளுமன்ற நிகழ்வுகள் பாரபட்சமற்ற ஒரு சபாநாயகரால் மேற்பார்வையிடப்படுவதை காண காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்