லொட்டரி மூலம் கிடைத்த பலகோடி ரூபாய்.... அதுவே பிரித்தானியரை தெருக்கோடிக்கு கொண்டு சென்ற சம்பவம்!

Report Print Abisha in பிரித்தானியா

லொட்டரியில், 9.7மில்லியன் பவுண்ட் பெற்ற பிரித்தானியர் ஒருவர் தனது வாழ்க்கையில் அதன் மூலம் பாடம் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், Michael Carroll. அவரின் 10 வயது இருக்கும் போது தந்தை உயிரிழந்தார். பின்னர் தாயின் அரவணைப்பில் வளர்ந்த Michael, வீட்டு செலவிற்காக குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பலரது வாழ்கையில் உள்ள கனவு போல் தானும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் Michael. அதன்படி தினமும் லொட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டுள்ளார்.

இந்நிலையில், 2002ஆம் ஆண்டு Michaelக்கு 9.7மில்லியன் பவுண்ட் பணம் லொட்டரி மூலம் கிடைத்துள்ளது. ஒரே நாளில் பணக்காரர் ஆன Michaelக்கு அந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் தாய்க்கு சிறிய அளவிலான ஒரு வீடு, நண்பர்களுக்கு பணம், மது, சொகுசு கார் என ஆடம்பரமாக தன் வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

தனக்கு லொட்டரியில் கிடைத்த மொத்த தொகையையும், 10வருடங்களில் செலவளித்துவிட்டு, ஒரு சுரங்க நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

இது குறித்து பேசிய Michael, ”நான் என் வாழ்க்கையை திரும்பி பார்க்க விரும்பவில்லை. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சுதந்திரமாக இருக்கிறேன். எதிரிகள் இல்லை. அந்த 10வருடம் அழகான மாயாஜாலம். அது என் நினைவில் எப்போம் இருக்கும். மது, மாது என்று அனைத்து தவறிலும் ஈடுபட்டேன். என் மனைவி சாண்ட்ராவுக்கு எனக்கும் பிரிவு வந்தது. என் மனைவியை நான் ஏமாற்றிவிட்டேன்.

இந்த ஆடம்பர வாழ்க்கை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. என்னிடம் இருந்த பணம் எல்லாம் தீர்ந்துப்போனது. அதன்பின் மூன்று மாதம் தங்குவதற்கு கூட இடம் இல்லை. எப்படி வந்ததோ எல்லாம் அப்படியே திரும்பிப்போனது. பின், ஒரு பிஸ்கெட் கம்பெனியில் வேலை. அதுவும் கொஞ்சம் நாள் தான். அதன்பின் கறிக்கடையில் வேலை செய்தேன். 5 வருஷம் நிம்மதியான வாழ்க்கை. அந்த சூழல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த இடத்தை மூடும் வரை அங்கு தான் இருந்தேன்.

தற்போது, நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாரத்தில் 7 நாள்களும் வேலை இருக்கும். நான் லாட்டரியில் ஜெயித்தவன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இப்போ ஒரு வாடகை வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்