தனது கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் ஆறு குழந்தைகளின் தந்தை: சோகப் பின்னணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஆறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ஒரு தம்பதி வாழ்ந்து வந்த நிலையில், அந்த கணவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளதையடுத்து, தனது கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட தயாராகி வருகிறார் அவர்.

நான்கு குழந்தைகளை தத்தெடுத்து, செயற்கை கருவூட்டல் முறையில் இரட்டைக் குழந்தைகளையும் பெற்று நிறைவாக வாழ்ந்து வந்தனர், பிரித்தானியாவின் Prentonஐச் சேர்ந்த David (41) மற்றும் Lisa Parkes (40) தம்பதி.

இருவரும் குழந்தைப்பருவம் முதலே நண்பர்களாக இருந்து, பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

ஆனால் திருமணத்திற்குப்பின் குழந்தைப்பேறு அடைவதில் பிரச்சினை இருந்ததால், நான்கு குழந்தைகளை தத்தெடுத்துக்கொண்டது காதல் ஜோடி.

அதன் பின்னர், செயற்கை கருவூட்டல் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தை இல்லாமல் இருந்த தம்பதிக்கு ஆறு குழந்தைகள் கிடைத்த மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால், திடீரென, Davidக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டதோடு, சிகிச்சைக்குப்பின்னும் மீண்டும் நோய் ஏற்பட, அவர் இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனவே கடைசியாக தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தயாராகி வருகிறார் David.

Lisaவின் அண்ணன் James, தனது தங்கை குடும்பம், கடைசி முறையாக பண்டிகையை வெளிநாடு ஒன்றில் கொண்டாடுவதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்