வீட்டிற்கு வந்து சேருங்கள்... ஹரி உட்பட மூன்று இளவரசர்களுக்கும் அவரச உத்தரவு பிறப்பித்த ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

திங்களன்று சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்கு வருமாறு இளவரசர்கள் ஹரி, வில்லியம் மற்றும் அவர்களது தந்தை இளவரசர் சார்லஸ் ஆகியோருக்கு எலிசபெத் மகாராணி அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அரச குடும்ப உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ஹரியின் மீது அதிக பாசம் கொண்ட ராணி, இந்த விவகாரத்தில் நேரடியாக இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வாரங்கள் அல்ல சில நாட்களுக்குள் விரைந்து ஒரு தீர்வு காணுமாறு 4 அரச குடும்பத்திற்கு ராணி அதிரடி உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இளவரசர்கள் ஹரி, வில்லியம் மற்றும் அவர்களது தந்தை இளவரசர் சார்லஸ் ஆகியோரை திங்கட்கிழமையன்று மகாராணி சாண்ட்ரிங்ஹாமில் உள்ள தனது தோட்டத்தில் சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்காக அவர்கள் மூன்று பேருக்கும் ராணி அவசர அழைப்பு ஒன்றினை விடுத்துள்ளார்.

அங்கு ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச பணிகளில் இருந்து விலக முடிவு செய்த விவரங்களை வெளியிடுவார்கள் என்று அரண்மனை வட்டாரம் கூறுகிறது.

மேகன் தற்போது கனடாவில் அவர்களின் எட்டு மாத மகன் ஆர்ச்சியுடன் இருக்கிறார். அவரும் கூட்டத்திற்கு அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் நேரம் காரணமாக அவர் கலந்துகொள்வது சந்தேகம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்