பாட்டியுடன் மனம் விட்டு தனியாக பேசிய ஹரி, தடைசெய்யப்பட்ட மேகன்: முடிவை மாற்றிக்கொண்ட மகாராணியார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1552Shares

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்திலிருந்து விலகுவது தொடர்பாக அரணமனையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு முன்னரே, ஹரி தனது பாட்டியாருடன் தனியாக மனம் விட்டு பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Sandringhamஇல் அமைந்துள்ள பிரித்தானிய மகாராணியாரின் வீட்டில் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே, இளவரசர் ஹரி தனது பாட்டியான மகாராணியாருடன் தனியாக மனம் விட்டு பேசியுள்ளார்.

தன் நிலை குறித்து அவர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, ஹரியையும் மேகனையும் முழு நேர பணியாற்றும் உறுப்பினர்களாக வைத்துக்கொண்டிருப்பதையே விரும்பியிருப்பேன் என்று கூறியதன் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், மகாராணியார், பின்னர் தனது பேரனின் விருப்பத்திற்கு இணங்கியுள்ளார்.

பேரனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மகாராணியார், இளவரசர் சார்லஸ், வில்லியம் மற்றும் ஹரி பங்கேற்ற இரண்டு மணி நேரக் கூட்டம் அமைதியாக நடைபெற்றதாம்.

கூட்டத்திற்குப் பிறகு, ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறி கனடாவில் அதிக நேரம் செலவிடும் ஒரு ‘மாறும் காலகட்டத்திற்கு’ 'transition period' மகாராணியார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த கூட்டத்தின்போது, ஹரியின் மனைவி மேகன், கான்பரன்ஸ் கால் மூலம் கூட இணைந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

தற்போது வான்கூவரிலிருக்கும் மேகனுக்கு கூட்டத்திலிருக்கும் ஹரியை தொலைபேசியில் அழைக்க தடைசெய்யப்பட்டிருந்தது.

ஒரு வேளை கான்பரன்ஸ் கால் செய்ய மேகனுக்கு அனுமதிக்கப்பட்டால், கூட்டத்தில் பேசப்படுபவற்றை அவருடன் வேறு யார் இருந்து கேட்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டதாக அரண்மனை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு ரகசியமான குடும்ப ஆலோசனைக்கூட்டம், கான்பரன்ஸ் கால் அல்ல என்றார் அரண்மனை அலுவலர் ஒருவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்