அடித்த அதிர்ஷ்டம்... ஆசையை நிறைவேற்ற வீடு: மூன்று வாரங்கள் கூட வாழாமலே உயிரிழந்த பிரித்தானிய பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியப் பெண் ஒருவர் தான் பிறந்த சொந்த நாட்டில் வீடு கட்டவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய நிலையில், அந்த வீட்டில் மூன்று வாரங்கள் கூட வாழாமலே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பர்மிங்காமில் வாழ்ந்து வந்தாலும் Evadney Gayle (67)க்கு தான் பிறந்த நாடான ஜமைக்காவில் ஒரு வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது நீண்டகால ஆசை.

அப்படியிருக்கும் நிலையில்தான், கசினோ ஒன்றில் அவருக்கு 300,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.

அந்த தொகையைக் கொண்டு தனது ஆசைப்படியே ஜமைக்காவில் ஒரு வீடு கட்டினார் Evadney. ஆனால், அந்த வீட்டுக்கு குடி போய் மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில், அவரது வீட்டில் அவர் பிணமாக கிடந்ததை உறவினர் ஒருவர் கண்டு பொலிசாரை அழைத்துள்ளார்.

கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் Evadney. Evadneyயின் உறவினர் ஒருவரே அவரது கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தி அறிந்து பர்மிங்காமிலுள்ள அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெயர் வெளியிடாத நண்பர் ஒருவர், Evadney இங்கிருந்து ஜமைக்கா போகும் போதே, அங்கே போய் நிலம் தொடர்பாக தகராறு எதிலும் ஈடுபடாதே, நிலத்தைவிட உயிர் முக்கியம் என்று எச்சரித்து அனுப்பியதாக தெரிவிக்கிறார்.

ஜமைக்காவைப் பொருத்தவரை நிலம் தொடர்பான பிரச்சனைகள் எழும்போது, வெறும் சண்டை வழக்கு என்றெல்லாம் செல்ல மாட்டார்களாம், கொன்று ஆளை இல்லாமலே செய்துவிடுவார்களாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...