ஸ்பெயினில் உள்ள பிரித்தானியர்கள் உடனடியாக வீடு திரும்ப உத்தரவு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்பெயினில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தையும் மூடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவித்ததை அடுத்து, அங்கிருக்கும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும் கவலையளிக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியில், ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ஸ்பெயின், எதிர்வரும் மார்ச் 24 செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலைக்குச் செல்வது, உணவு வாங்குவது அல்லது மருத்துவ வசதி பெறுவதைத் தவிர்த்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸால் 13,700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 598 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் உள்ள பிரித்தானிய பயணிகள் தங்கள் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் அல்லது விமான நிறுவனத்தை விரைவில் தொடர்பு கொள்ளுமாறும், அதிகாரிகள் கொடுத்திருக்கும் திகதிக்கு தேதிக்கு முன்னர் அவர்கள் வீடு திரும்புமாறும் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்