பிரித்தானியா உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது! நெஞ்சம் உருகி நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்

Report Print Santhan in பிரித்தானியா

கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் அவசர நிலை இருக்கும் நிலையில், அதை தைரியமாக எதிர் கொண்டு வரும் அரசு ஊழியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வருவதால், சில தினங்களுக்கு முன்பு பிரதர் போரிஸ் ஜான்சன் 21 நாட்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அப்படி தேவையில்லாமல் வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது இருக்கும் அவசர நிலையை எதிர் கொள்வதில், நீங்கள் அசாதாரண தைரியத்தை காட்டி வருகிறீர்கள், நான் இதை NHS ஊழியர்களுக்கு மட்டும் சொல்லவில்லை, காவல்துறை, ஆயுதப்படைகள், உள்ளூர் அரசு, சமூக பாதுகாப்பு மற்றும் பிற இடங்களிலும் உள்ள எங்களின் புத்திசாலித்தனமான அரசு ஊழியர்கள் அனைவருக்கும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிச்சயமாக நாடு உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 465-ஐ தொட்டுள்ளதுடன், 135 பேர் இந்த நோயில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...