இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்! அவர் வெளியிட்ட முக்கிய வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக 906,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 45,408 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் உலகின் பல முக்கிய அரசியல் தலைவர்கள், அரச குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இளவரசர் சார்லஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே, நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இளவரசர் சார்லஸ் தற்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்ததாக பிரித்தானிய அரச குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த இளவரசர் சார்லஸ் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் முற்றிலும் குணமடைந்தாலும் தொடர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்கப் போகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் போராடும், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு தேசமாக, ஆழ்ந்த சவாலான சூழ்நிலையை நாம் எதிர்கொள்கிறோம். இது மில்லியன் கணக்கான நமது சக குடிமக்களின் வாழ்வாதாரங்கள், வணிகங்கள் மற்றும் நலன்களை அச்சுறுத்துகிறது என்பதை அறிய முடிகிறது. இது எப்போது முடிவடையும் என்று நம்மில் யாரும் சொல்ல முடியாது, ஆனால் அது முடிவடையும்.

அது நிகழும் வரை, நாம் அனைவரும் முயற்சி செய்து நம்பிக்கையுடன் வாழ்வோம், நம் மீது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடனும், வரவிருக்கும் நேரங்களை சிறந்ததாக எதிர்நோக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 29,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,352 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இளவரசர் சார்லஸை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்