மேகன் மெர்க்கலுக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் பெரும் பின்னடைவு: மொத்த செலவுகளையும் ஏற்பதாக அறிவிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தனது தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட்டதாக கூறி மேகன் மெர்க்கல் தொடர்ந்த வழக்கின் முதல் சுற்றை இழந்த நிலையில், நீதிமன்ற செலவீனமாக 67,000 பவுண்டு தொகையை செலுத்த அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ANL என்ற பத்திரிகை நிறுவனம் மீது மேகன் மெர்க்கல் தொடர்ந்த வழக்கே, தோல்வியில் முடிந்துள்ளது.

தமது தந்தையான தாமஸ் மெர்க்கலுக்கு 2018 ஆகஸ்டு மாதம் மேகன் கைப்பட எழுதிய கடிதத்தின் ஒருபகுதி ANL நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில், தமது தனிப்பட்ட உரிமை மீதான தாக்குதல் இதுவென கூறி மேகன் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் அந்த கடிதமானது மேகனின் தோழிகள் சிலரால் சமூக ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டது எனவும், அதையே தாங்களும் பயன்படுத்தியதாக ANL நிறுவனம் வாதிட்டுள்ளது. தொடர்ந்து மேகனால் தமது நிலையை நிரூபிக்க முடியாமல் போகவே, மே மாதம் 1 ஆம் திகதி ANL நிறுவனத்திற்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால், நீதிமன்ற செலவுகளை மேகன் மெர்க்கல் ஏற்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் தமது சட்டத்தரணி மூலம், மொத்த செலவீன தொகையான 67,888 பவுண்டுகளை தாம் செலுத்த தயார் என மேகன் மெர்க்கல் உறுதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்