எளிதில் இலக்காகும் நிலையில் உள்ளார்! லண்டனில் 12 வயது சிறுமி குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் 12 வயது சிறுமி காணாமல் போயுள்ள நிலையில் பொலிசார் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.

தெற்கு லண்டனை சேர்ந்த Jeanie Anderson என்ற 12 வயது சிறுமி New Addington பகுதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் பொலிசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், Jeanie Anderson, New Addington பகுதியில் காணாமல் போயுள்ள நிலையில் அதே பகுதியில் தான் எங்காவது இருப்பார் என கருதுகிறோம்.

சிறுமி Jeanie Anderson எளிதில் இலக்காகக்கூடிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்