லண்டனில் கோடிக்கணக்கில் மதிப்பிலான வீட்டை வெறும் £10 கொடுத்து வாங்கிய இளம்பெண்! எப்படி தெரியுமா? ஆச்சரிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் £500,000 மதிப்புள்ள வீடு மற்றும் சொகுசு காரை வெறும் £10 raffle டிக்கெட் மூலம் இளம்பெண் வென்றுள்ளார்.

Niomi Boontam என்ற 27 வயது பெண்ணுக்கு தான் கனவிலும் நினைத்து பார்க்காத இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

வரும் 13ஆம் திகதி Niomi புதிய வீட்டுக்கு குடிபெயரவுள்ளார். அதாவது raffle டிக்கெட் என்பது குலுக்கல் சீட்டு போல £10க்கு விற்கப்பட்டது.

மொத்தமாக ஒரு இலக்கு வைத்து டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும். அதன் மூலம் வீட்டை விற்பவருக்கு அதன் மதிப்புக்கான முழு பணம் கிடைத்துவிடும். பின்னர் அந்த டிக்கெட்டை வாங்கிய ஒரு அதிர்ஷ்டசாலிக்கு வீடு கிடைக்கும்.

அப்படி தான் Niomi-க்கு வீடு மற்றும் சொகுசு கார் கிடைத்துள்ளது.

Niomi கூறுகையில், சாதாரண வாடகை வீட்டில் வசித்து வந்த எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது, இது தொடர்பான தகவல் எனக்கு வந்த போது என் உடல் உடல் நடுங்கியது, அது உண்மையா அல்லது பொய்யா என யோசித்தேன்.

மேற்கு லண்டனில் உள்ள இந்த அடுக்குமாடி வீட்டில் இரண்டு படுக்கையறைகள், சொகுசான பாத்ரூம், தனி சமையலறை மற்றும் லிவிங் அறை உள்ளது.

சட்ட கட்டணங்கள் மற்றும் முத்திரை வரி கூட raffle மூலமே செலுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.

அடுத்த Raffle House குலுக்கல் நவம்பர் 30 வரை நடக்கவுள்ளது.

அதன்படி தென்கிழக்கு லண்டனில் £750,000 மதிப்புள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு வெற்றியாளருக்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்