பிரித்தானியாவில் முகக்கவசம் அணிய மறுத்த நபர்! பொலிசாரின் அதிரடி செயல்: கமெராவில் சிக்கிய பரபரப்பு காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
978Shares

பிரித்தானியாவில் பயணிகள் இரயில் ஒன்றில் முகக்கவசம் இல்லாமல் பயணித்த நபர் முகக்கவசம் அணிய மறுத்த நிலையில், அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பொதுப் போக்குவரத்துகளின் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லையென்றால் பொலிசாரால் அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் மருத்துவநிலை காரணமாக முகக்கவசம் அணிய முடியாதவர்களுக்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை லிவர்பூலின் Lime Street Station-ல் பொலிஸ் அதிகாரி ஒருவர், இளைஞரை முகக்கவசம் அணியும் படி கூறுகிறார்.

அப்போது அந்த இளைஞர் மருத்துவ நிலை காரணமாக முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். பொலிசார் இது குறித்து கேட்ட போது, அது வாக்குவாதமாக மாறியதால், அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒரு நபர் லிவர்பூலின் Lime Street Station நிலையத்தின் இரயிலில் பயணிகளின் அச்சுறுத்தல் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 2-ஆம் திகதி புதன் கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.20 மணியளவில் நடந்துள்ளது. குறித்த நபர் பயணத்தின் போது, இருமியுள்ளார்.

இதனால் இது குறித்து பொலிசார் அவரிடம் விசாரித்து, முகக்கவசம் அணியும் படி வற்புறுத்த, ஆனால் அவர் மறுத்ததால், உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சியை அங்கிருக்கும் நபர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை யார் மீது தவறு? என்பது சரியாக தெரியவில்லை.

உண்மையில் அவர் மருத்துவ நிலை காரணமாக முகக்கவசம் அணிய முடியாதவரா? என்பது தெரியவில்லை. ஆனால், அந்த வீடியோவில், குறித்த இளைஞரின் நண்பர், உண்மையிலே அவர் மருத்துவ நிலை காரணமாக முகக்கவசம் அணிய முடியாதவர் என்று கூறி, பொலிசாரின் பெயர் மற்றும் அவரின் எண்ணை கேட்பதை பார்க்க முடிகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்