புதிய அணு மின் நிலையம் அமைக்க பிரித்தானிய அரசு திட்டம்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
64Shares

சஃபோல்க் நகரில் ஒரு புதிய £20 பில்லியன் மதிப்பிலான அணு மின் நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

புதிய நிலையம் Sizewell C தளம் என அழைக்கப்படுகிறது. ஏற்கெனவே Sizewell A மற்றும் Sizewell B என இரண்டு தளங்கள் இருந்தன. அதில் Sizewell A தளம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

அமைக்கப்படவுள்ள Sizewell C தளத்தில் 3.2 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும், இது பிரித்தானியாவின் மின்சாரத் தேவைகளில் 7 சதவீதத்தை பூர்த்தி செய்யப் போதுமானது.

இந்த திட்டம் ஒரு அபத்தமான செலவு என்று பிரச்சாரகர்கள் கூறியதால் சர்ச்சைக்குரியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசின் எந்தவொரு ஒப்பந்தமும் பணத்திற்கான மதிப்பு மற்றும் மலிவு போன்ற பகுதிகளில் பலவிதமான ஒப்புதல்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.

மேலும் பேச்சுவார்த்தைகள், சீனாவின் General Nuclear Power-உடன் இணைந்து பிரான்சின் EDF நிறுவனம் கட்டமைக்கும் சோமர்செட்டில் உள்ள Hinkley Point C அணுசக்தி ஆலையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் எனறும் அரசாங்கம் கூறியது.

இந்த திட்டத்தை தொடர்ந்தால், இதன் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டின் போது ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கக்கூடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2050-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான (net zero emissions) இலக்கை அடைவதற்கு, புதிய அணு மின் நிலையம் அமைக்க உறுதியுடன் இருப்பதாக அரசாங்கம் எப்போதும் தெளிவாக உள்ளது.

மற்ற அணுசக்தி திட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளையும், சோமர்செட்டில் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள ஒரே மாதிரியான ஆலையையும் கொண்டு, இந்த புதிய Sizewell C தளம் ஒப்புதல் பெற தெளிவான காரணமாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்