பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ், முதல் கொரோனா அலையையே மிஞ்சிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 21,683. ஆனால், டிசம்பர் 22 அன்று புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 21,286.
இன்னும் சில நாட்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழியத்தொடங்கிவிடும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
தங்கள் மருத்துவமனைகள் போர்க்களம் போல் காணப்படுவதாக லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ உதவிக்குழுவினர், நாளொன்றுக்கு 8,000 தொலைபேசி அழைப்புக்களை பெருகின்றனர்.
Cardiff மற்றும் Vale பல்கலைக்கழக போர்டு, மருத்துவக்கல்லூரி மாணவர்களை உதவிக்கு அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி வருவதையடுத்து, இங்கிலாந்து என் ஹெச் எஸ் மொத்த மருத்துவ சேவை அமைப்பையும் மார்ச் வரையிலாவது எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், முடிந்தவரை மருத்துவமனைகள் படுக்கைகளை தயாராக வைத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டுமே பிரித்தானியாவில் 30,501 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.