பிரெக்சிட்டால் குழப்பம்... விமானம் ஏற முயன்ற பிரித்தானியர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
249Shares

பிரெக்சிட் நிறைவேறிய உடன்தானே குழப்பமும் துவங்கியுள்ளது எனலாம்... குறிப்பாக, ஸ்பெயினில் வாழும் பிரித்தானியர்கள் சிலர் நாடு திரும்ப முயலும்போது, கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து கல்வி, பயணம், வேலை உட்பட பல விடயங்களில் மாற்றம் ஏற்படும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

குழப்பங்களை தவிர்ப்பதற்கான சில நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள் மீண்டும் அந்தந்த நாடுகளுக்கு செல்வது தொடர்பான சில அறிவிப்புகளும் வெளியாகின.

இருந்தாலும், அதையும் மீறி ஸ்பெயினில் வாழும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடுக்கு விமானம் ஏற முயன்ற ஒன்பது பேரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பிரெக்சிட் காரணமாக, ஜனவரி 1 முதல் பழைய ஆவணங்கள் செல்லாது என்று கூறி தடுத்து நிறுத்தப்பட்டதால், அதை எதிர்பாராத அந்த ஒன்பது பேரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதில் தனது கணவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இப்படி திடீரென தடுத்து நிறுத்தப்பட்டதால் கண்கலங்கினார் வயதான பெண்மணி ஒருவர்.

Patricia Moody (69) என்பவரும், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளின்போது, பிரெக்சிட்டால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்துகொண்ட நிலையிலும், இப்படி எதிர்பாராமல் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள ஸ்பெயின் தூதரகம், இது விமான நிறுவனத்துடனாக தகவல் தொடர்பு பிரச்சினையால் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட ஒரு பிரச்சினை என்று தெரிவித்துள்ளது.

பிரித்தானிய விமான நிலைய ஊழியர்களுக்கு எவ்வித ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதுகூட தெரியவில்லை போல் தோன்றுகிறது என்று கூறியுள்ளார் ஜேர்மனி வாழ் பிரித்தானியர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர்.

உலகமே பிரெக்சிட்டால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை உற்றுக்கவனித்துவரும் நிலையில், சில பிரித்தானிய அலுவலர்களுக்கே அது குறித்து சரியான அறிவு இல்லாததால் வெளிநாடு வாழ் பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பிரெக்சிட்டால் இன்னும் என்னென்ன குழப்பங்கள் காத்திருக்கிறதோ!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்