கொரோனாவை தடுக்க வீட்டிலேயே இருந்த படி தடுப்பூசிக்காக காத்திருப்பது மட்டும் போதாது என்று அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE) உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பேராசிரியர் Andrew Hayward, கடந்த வாரம் தேசிய ஊரடங்கு அமுல் படுத்தாவிட்டால் இங்கிலாந்து ஒரு பேரழிவை நோக்கி செல்லக்கூடும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே, பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் 3வது தேசிய ஊரடங்கை நேற்று அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் பிரபல வானொலியில் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று உரையாற்றிய பேராசிரியர் Andrew Hayward-யிடம், புதிய கட்டுப்பாடுகள் பேரழிவைத் தவிர்க்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் 2020 மார்ச் மாதத்தில் எதிர்கொண்டதைப் போலவே மோசமானது, ஆனால் வைரஸ் வேறுபட்டது, மேலும் நம்மிடம் இருக்கும் ஊரடங்கு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
எனவே புதிய நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும், கடைசி ஊரடங்கிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வீட்டிலேயே தங்கி இருந்த படி தடுப்பூசிக்காக காத்திருப்பதை விட கூடுதலாக பங்காற்ற வேண்டும், அதற்கான முய்றிசியை முன்னெடுக்க வேண்டும் என பேராசிரியர் Andrew Hayward வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.