கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சம்... பிரித்தானியாவில் இரண்டாவது நாளாக தொடரும் சோகம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
930Shares

ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளின் இறப்பு புதிய உச்சம் கண்டுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 1041 என பதிவாகியுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,322 என தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி கடந்த 9 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 50,000 தாண்டி வருகிறது.

பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 77,346 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 22 நாட்களாக பிரித்தானியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக 1000 கடப்பதாக தெரிய வந்துள்ளது.

மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,836,801 என பதிவாகியுள்ளது.

இதனிடையே நேற்று பேசிய பிரதமர் ஜோன்சன், பிரித்தானியாவில் மொத்தம் 1.2 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற பகீர் தகவலை வெளியிட்டார்.

30,074 பேர் இந்த நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் லண்டனை பொறுத்தமட்டில் 30-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்