எங்களுக்கு பைசர் தடுப்பூசி வேண்டாம்! அடம்பிடிக்கும் பிரித்தானியர்கள்: சொல்லும் காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
607Shares

தங்களுக்கு பைசர் தடுப்பூசி வேண்டாம் என அடம்பிடிக்கிறார்களாம் வயதான பிரித்தானியர்கள்! காரணம், பைசர் தடுப்பூசி வெளிநாட்டு தயாரிப்பாம்.

எங்களுக்கு எங்கள் நாட்டு கிடைத்தால்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வோம், ஆங்கில தடுப்பூசி தயாராகும்வரை காத்திருக்கத் தயார் என்று கூறிவிட்டார்களாம் சில பிரித்தானியர்கள்.

குறிப்பாக, வட கிழக்கு பிரித்தானியாவிலுள்ள பிரித்தானியர்கள் மருத்துவர்கள் கொடுத்த அப்பாயிண்ட்மெண்டை மறுத்து, தடுப்பூசி போடாமல் தவிர்த்திருக்கிறார்கள்.

-78C வெப்பநிலையில் வைக்கப்படும் பைசர் தடுப்பூசியை ஒரு முறை அறை வெப்பநிலைக்கு கொண்டுவந்துவிட்டால், அதை உடனே பயன்படுத்திவிடவேண்டும், இல்லையென்றால் அது வீணாகிவிடும்.

ஆகவே, இந்த பிரித்தானியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளததால், அவர்களுக்கு போடப்பட வேண்டிய தடுப்பூசி வீணாவதை தவிர்க்க, அதை பொலிஸ் அதிகாரிகளுக்கு போட்டுள்ளார்கள் மருத்துவர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்