லண்டனில் பரபரப்பு மிகுந்த பாலத்தில் ஜாக்கிங் சென்ற நபருக்கு நேர்ந்த துயரம்! காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்

Report Print Santhan in பிரித்தானியா
307Shares

லண்டனில் பரபரப்பு மிகுந்த பாலத்தில், ஜாக்கிங் சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதால், அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் Battersea பாலத்தில், நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நபர் ஒருவர் ஜாக்கிங் சென்றுள்ளார்.

அப்போது, திடீரென்று அவர் மீது கார் மோதியதால், சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து சம்பவத்தை நேரில் கண்ட நபர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறுகையில், விபத்துக்குள்ளான நபர் ஓடி வந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

அப்போது திடீரென்று எதிர்பார்தவிதமாக Range Rover கார் மோதியது. இதையடுத்து இதை அறிந்து உடனே அங்கு துணை மருத்துவர்கள் வந்து, அவருக்கு சி.பி.ஆர் முறையைப் பின்பற்றி காப்பாற்ற போராடினர்.

அதாவது, அவரின் மார்ப்பில் வைத்து அழுத்தினர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், டிரைவரிடம் பேசுவதை பார்க்க முடிந்தது. அவரைப் பார்க்கும் போது 30-வது வயதின் பிற்பகுதியில் இருப்பது போன்றும், அவருடன் பெண் ஒருவர் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

மேலும், அவர் நான் இது குறித்து பல ஆண்டுகளாக புகார் அளித்துள்ளதாகவும், இங்கு பாதசாரிகளுக்கும், போக்குவரத்து விளக்குகளிற்கும் எந்த ஒரு இடைவெளியும் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் எம்.பி. Greg Hands தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று மாலை 6 மணிக்குப் பிறகு Chelsea-வின் Battersea பாலத்தின் பியூபோர்ட் தெரு சந்திப்பில் ஒரு பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், அப்பகுதியை ஓட்டுனர்கள் தவிர்க்கும் படியும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்