நூலிழையில் £156 மில்லியன் லொட்டறி தொகையை இழந்த பிரித்தானியர்: வெளியான முழு பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானிய இளைஞர் ஒருவர் யூரோ மில்லியன் ஜாக்பாட் லொட்டறியில், ஐந்தில் ஒரு இலக்கத்தை தவறாக தெரிவு செய்ததால் முதல் பரிசான 156 மில்லியன் பவுண்டுகள் தொகையை இழந்துள்ளார்.

பிரித்தானியரான 24 வயது ஐடன் முர்ரே கடந்த வாரத்திற்கான 2 லொட்டறிகளை வாங்கியிருந்தார்.

பின்னர் அதன் 5 இலக்கங்களில் நான்கையும் சரியாக தெரிவு செய்திருந்ததுடன், இரண்டு அதிர்ஷ்ட நட்சத்திரங்களையும் சரியாக கணித்திருந்தார்.

ஆனால் ஒரே ஒரு இலக்கம் தவறான தெரிவானதால், அவருக்கு வெறும் 666.50 பவுண்டுகள் தொகை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.

30 என்ற இலக்கத்தை கணிக்காமல் விட்டதால், வெறும் நான்காவது பரிசான 666.50 பவுண்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது.

பொதுவாக லொட்டறியில் கிடைக்கும் தொகையை புதிய வீடு வாங்கும் கனவுடன் சேமித்து வைக்கும் ஐடன்,

இந்த முறை வெற்றி பெற்ற தொகையை தமக்கு நெருக்கமானவர்களுடன் உணவருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஆனால் முதல் பரிசான 156 மில்லியன் பவுண்டுகள் இந்தமுறையும் யாரும் வெல்லாத நிலையில், தற்போது அது 176 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

24 வயது பிரித்தானிய இளைஞரின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றவிருந்த லொட்டறி பரிசு, ஒரே ஒரு இலக்கத்தால் மொத்தமாக பறிபோயுள்ளது.

இருப்பினும், தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், தொடர்ந்து யூரோ மில்லியன் ஜாக்பாட் லொட்டறியில் பங்கேற்க இருப்பதாகவும் ஐடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்