கண்ணிலிருந்து வெளிவந்த புழுக்கள்: இளம்பெண் அதிர்ச்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கால்நடைகளுக்கு மட்டுமே வரும் நோய், இளம்பெண் ஒருவருக்கு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் oregon பகுதியைச் சேர்ந்தவர் Abby Beckley(28), இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கண் மருத்துவரிடம் சென்ற அவர் பரிசோதித்து பார்த்த போது கண்ணிலிருந்து அரை அங்குல புழுவை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

இது போன்று கடந்த 20-நாட்களில் மட்டும் 14 புழுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளில் மட்டுமே காணப்படும் இந்நோய் மனிதர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்ததாகவும், தற்போது தான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Abby Beckley கடந்த 2016-ஆம் ஆண்டு ஆரிகானில் உள்ள கோல்டு கடற்கரை பகுதியில் இருக்கும் பெக்லி குதிரையேற்றம் மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருக்கிறார். கால்நடை மீது மிகவும் ஆர்வம் கொண்ட இவர் அங்கு சுமார் இரண்டு வாரங்கள் தங்கியுள்ளார்.

அதன் பின் அங்கிருந்து ஊர் திரும்பிய அவருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்களை அவர் பார்த்த போது, கண்களின் உள்ளே புழு ஒன்று நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

புழுவை அவர் வெளியே எடுத்த போது சுமார் ஒரு இன்ச் நீளத்துக்கு அந்தப் புழு இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரது கண்களில் இருந்து புழுக்கள் வெளியேறிய படியே இருந்துள்ளன.

கடும் அவதிக்குள்ளான அவர் அங்கிருக்கும் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். எந்த பலனும் அளிக்காத காரணத்தினால், அவரது உறவினர்கள் இதற்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கண்ணில் இருந்து மொத்தமாக 14 புழுக்களை அகற்றியுள்ளனர்.

அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சோதனைக்கு வந்து சென்ற அவருக்கு தற்போது கண்களில் எந்த புழுவும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை புழுக்கள் கண்ணில் உள்ள ஈரத்தன்மையைப் பயன்படுத்தி வளரக்கூடியது எனவும் புழுக்கள் மாட்டு தொழுவங்களில் உள்ள ஒருவகை ஈக்கள் மூலம் பரவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Abby Beckley கடந்த 2016-ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற கடற்கரைக்கு அருகாமையில் ஒரு தொழுவம் இருந்துள்ளது. அங்கிருந்தே அந்த அரியவகை நோய் அவருக்கு பரவியிருக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்