உலகில் யாரும் செய்யாததை செய்யும் அதிசய குழந்தை: அப்படியென்ன செய்தான்?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 14 மாத குழந்தை தொலைக்காட்சியில் வரும் சொற்களை எளிதாக படிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்டிஸ் ஸ்மித்- ஷைல்யா தம்பதியின் குழந்தை பெயர் ஜஸ்டுஸ், 14 மாத குழந்தையான இவன் தற்போது தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் இருக்கும் சொற்களை எளிதாகவும், வேகமாகவும் படிக்கிறான்.

பொதுவாக ஆறு வயது வரை குழந்தைகள் சொற்களை படிக்க திணறும் நிலையில் ஜஸ்டுசின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது குறித்து ஜஸ்டுஸின் பெருமைக்குரிய தந்தை ஸ்மித் கூறுகையில், அவன் மூன்று மாத குழந்தையாக இருப்பதிலிருந்தே அவனிடம் சொற்களை காட்டி நாங்கள் அதை கூறுவோம்.

ஜஸ்டுஸும் சொற்களை ஆர்வமாக பார்ப்பான், என் மனைவி மிகவும் புத்திசாலி, அந்த திறமை அப்படியே ஜஸ்டுசுக்கும் வந்திருக்கலாம்.

மாதங்கள் போக போக சொற்களை படிக்க அவன் தொடங்கினான், தற்போது டிவியில் வரும் சொற்கள், புத்தகம் மற்றும் பத்திரிக்கையில் இருக்கும் சொற்களை எளிதாக அவன் படிக்கிறான்.

இதற்காக சிறப்பு பயிற்சி எல்லாம் நாங்கள் அவனுக்கு கொடுக்கவில்லை, என் மகனை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்