கணவரின் கையை தட்டிவிட்ட மெலேனியா டிரம்ப்: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பொது நிகழ்ச்சியில் தனது மனைவியின் கையைப் பிடிக்க முயன்ற போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த வீடியோ, புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.

அமெரிக்காவின் அரசுமுறை விருந்தினராக அழைக்கப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது மனைவியுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு தனது மனைவியுடன் வந்த மேக்ரானை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரவேற்றார்.

அதன் பிறகு டிரம்ப், அவரின் மனைவி மெலேனியா, மேக்ரான், அவரின் மனைவி ப்ரிஜிட் மேக்ரான் ஆகியோர் புகைப்படத்திற்காக Pose கொடுத்தனர். அப்போது, டிரம்ப் தனது மனைவி மெலேனியாவின் கையைப் பிடிக்க முயன்றார்.

ஆனால், மெலேனியா அவரது கையை தட்டி விட்டார். இது கமெராக்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவாகியது. மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆபாச பட நடிகை, பிளேபாய் இதழின் மொடல் ஆகியோருடன் டிர்ம்பிற்கு நெருங்கிய உறவு இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில் மெலேனியா இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

Getty Images

அதனை உறுதிபடுத்தும் வகையில் அவர்களும் பேட்டியளித்திருந்தனர். இந்த காரணங்களால் மெலானியா தனது கணவர் டிரம்ப்பின் மேல் வெறுப்படைந்தார். அதன் காரணமாகவே அவரின் கையை பற்றிக் கொள்ள அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதே போல, கடந்த பிப்ரவரி மாதம் புளோரிடா நகரில் உள்ள பள்ளிக்கு சென்றபோது, டிரம்பின் கையை பிடிப்பதை மெலானியா தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers