குட்டி இளவரசியை கொன்று தின்ன விரும்பிய நபர்: நண்பனிடம் அளித்த ரகசிய வாக்குமூலம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சிறார் ஆபாசப்பட வழக்கிற்காக Colorado சிறையிலிருக்கும் ஒரு அமெரிக்கர், தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்களில், பொலிசாரிடம் சொல்லாத பல அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Gary Olivia (54) என்னும் அந்த குற்றவாளி, Michael Vail என்னும் தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களில் கூறியுள்ள விடயங்கள் கேட்போரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

கலை நிகழ்ச்சிகளில் இளவரசி வேடம் தரிக்கும் குட்டி மொடல் JonBenét Ramsey (6). ஒருநாள் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்தாள் அவள்.

அவளது கொலையில் நீண்ட நாட்களுக்கு துப்பு துலங்காத நிலையில், சிறார் ஆபாச புகைப்பட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஒரு நபர் JonBenétஇன் கொலைக்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Gary Olivia என்னும் அந்த நபர் தனது நண்பராகிய Michaelக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றில், தனது கையில் இருந்த JonBenét தவறி கீழே விழுந்து இறந்ததாகவும், அது ஒரு விபத்து என்றும் கூறியுள்ளார்.

இன்னொரு கடிதத்தில், அவர் JonBenét என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டாள், அவளது அழகான முகத்தைப் பார்க்கும்போதுதான் மற்ற குழந்தைகளை நான் கொன்றது எவ்வளவு பெரிய தவறு என்பதே எனக்குப் புரிகிறது என்று எழுதியிருக்கிறார்.

Gary Oliviaமீது ஏற்கனவே பொலிசாருக்கு சந்தேகம் இருந்த நிலையில், அவர் Michaelக்கு எழுதிய கடிதங்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

JonBenét கொலையில் Gary, Michaelக்கு எழுதிய கடிதங்கள்தான் முக்கிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Michaelக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் Gary, JonBenétஇன் உடலை தின்ன விரும்பியதாக எழுதியுள்ளதுதான் எல்லாவற்றையும் விடக் கொடுமை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்