சமூக ஊடகத்தில் பிரபலமாவதற்காக தங்கையிடம் தவறாக நடந்து கொண்ட அண்ணன்: அதிர்ச்சியில் 2 மில்லியன் பார்வையாளர்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக தனது தங்கையின் உதடுகளில் முத்தமிட்ட ஒரு அண்ணன் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வேடிக்கை வீடியோக்களைப் பதிவிடும் Chris Monroe என்னும் நபர், தனது ஏமாற்றும் வேடிக்கை (prank ) வீடியோக்களுக்காக யூடியூபில் பிரபலமானவர்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது.

வீடியோவை காண

முத்தமிடுவதில் சிறந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Monroe, அந்த வீடியோவில் தனது தங்கையான Kaitlyn என்னும் பெண்ணை நீண்ட நேரம் ஒரு காதலியை முத்தமிடுவது போல மீண்டும் மீண்டும் முத்தமிடுகிறார்.

2 மில்லியன் பேர் அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த வீடியோவைப் பார்த்து மிகவும் அசௌகரியமாக உணர்ந்ததாக சுமார் 20,000 பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அந்த வீடியோவைப் பார்த்த குற்றத்திற்காக பொலிசாரிடம் சென்று சரணடைய விரும்பினேன் என்கிறார் ஒருவர்.

இன்னொருவர் இதில் வேடிக்கை என்ன இருக்கிறது என்கிறார். prank என்றால் என்ன என்று அவருக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மற்றொருவர்.

கடைசியாக அந்த பெண் தன் தங்கைதான், என்றாலும் தன் உடன் பிறந்த தங்கையல்ல, சித்தப்பா பெண் என்று கூறியிருக்கிறார் Monroe.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers