பீர் குடித்தால்...20 கிலோ உடல் எடை குறையும்... நிரூபித்துக்காட்டிய குடிமகன்: எப்படி தெரியுமா

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் நபர் ஒருவர் 46 நாட்கள் பீர் மட்டுமே குடித்து 20 கிலோ உடை எடை குறைத்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின், ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான டெல் ஹால் என்ற நபரே இவ்வாறு உடல் எடையை குறைத்துள்ளார்.

அதிக எடை காரணமாக கவலைப்பட்டு வந்த ஹால், ஈஸ்டர் முன் வரும் 40 நாட்களும் திட உணவை தவிர்த்து, பிரத்தியேகமாக பீர் மட்டுமே குடித்து விரதம் இருக்க முடிவு செய்துள்ளார். 1600-களில் துறவிகளின் பண்டைய பாரம்பரியத்திலிருந்து இந்த யோசனை வந்ததாக ஹால் குறிப்பிட்டுள்ளார்.

உணவை முழுமையாக தவிர்த்த ஹால், தினமும் ஐந்து கோப்பை பீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். இந்நிலையில், 46 நாட்களுக்கு பின் ஹால் 20 கிலோ எடை குறைந்துள்ளார்.

இதுகுறித்து டெல் ஹால் கூறியதாவது, நான் சாதரணமாக விரதம் இருந்திருந்தால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்குமா என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், பீரால் இது நடந்துவிட்டது. தற்போது நான் 20 வயது இளைஞன் போல் உணருகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்