தனது அக்கா பிரசவிப்பதை நேரில் பார்த்த தங்கையின் ரியாக்‌ஷன்: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது அக்கா பிரசவிக்கும்போது அவருக்கு உதவியாக அவர் அருகே நிற்க முடிவு செய்த ஒரு தங்கையின் ரியாக்‌ஷன்களை பதிவு செய்துள்ள ஒரு வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் Missouriயில் Michelle என்ற இளம்பெண் பிரசவிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது தங்கை Maya அவருக்கு ஆதரவாக அருகில் நிற்க முடிவு செய்தார்.

அப்போது வாழ்வில் முதன்முறையாக, தன் பாசமிக்க சகோதரி பிரசவ வலியில் துடிப்பதைக் கண்டு தானும் துடித்து, பிரசவித்ததும் ரிலாக்ஸ் ஆகும் தன் அக்காவையும் புதிதாக பிறந்த அக்காவின் குழந்தையையும் பார்த்ததும் தானும் மகிழ்ந்து, என அவர் முகத்தில் தோன்றும் பலவித ரியாக்‌ஷன்கள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

வீடியோவை காண

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், Maya தனது அக்கா பிரசவிக்கும் கட்டிலின் ஓரத்தில் நிற்பதைக் காணலாம்.

இறுதியாக குழந்தை பிறந்ததும் தனது அக்காவின் முகத்தில் காணப்படும் அமைதியைக் கண்டு தானும் அமைதியடைவதோடு புதிதாக தனக்கு பிறந்துள்ள குட்டி உறவினரை அறிந்து கண்ணீர் மல்க புன்னகைக்கும் அவரது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers