16 நொடிகளில் பொடி பொடியான 16,000 டன் இரும்பு கட்டிடம்.. வைரல் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் 16,000 டன் இரும்பால் கட்டப்பட்ட கட்டிடம் 16 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பென்சில்வேனியா, பெத்லகேமில் உள்ள கைவிடப்பட்ட இரும்பு தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் உலக தலைமையகமாக செயல்பட்டு வந்த மார்டின் டவர் கட்டிடமே இடித்து தடைமட்டமாக்கப்பட்டது.

அப்பகுதியில், மிகப்பெரிய கட்டிடமான 21 அடுக்குமாடி கொண்ட இக்கட்டிடம் தகர்க்கப்பட்டதை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய இரும்பு உற்பத்தியாளராக திகழ்ந்து வந்த நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டு தனது வணிகத்தை கைவிட்டது.

வெடி பொருட்களால் தரைமட்டமாக்கப்பட்ட 47 ஆண்டு பழமையான மார்டின் டவர் கட்டிடம், திறக்கப்பட்ட சில ஆண்டுகளிலே வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் ஒரு இடத்தை பிடித்தது.

இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்து வரும் கட்டிடத்தை, உரிமையாளர்கள் அலுவலகங்கள், கடைகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு என கலவையாக புதிதாக கட்ட திட்மிட்டு மார்டின் டவரை இடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்