பெற்றோர் பேச்சை கேட்காமல் கடலில் இறங்கிய மாணவி சுறாக்களுக்கு இரையான சோகம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கரீபியன் கடலில் குளித்துக்கொண்டிருந்த அமெரிக்க மாணவி சுறா தாக்குதலில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே (21) என்கிற மாணவி, தன்னுடைய பெற்றோருடன் கரீபியன் பகுதியில் உள்ள பஹாமாஸ் தீவிற்கு சென்றுள்ளார்.

அங்கு கடலில் குளிக்க செல்வதாக ஜோர்டான் கூறியுள்ளார். சுறாக்கள் அதிகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

அதனையும் மீறி கடலுக்குள் இறங்கிய ஜோர்டனை, உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் மூன்று சுறாக்கள் திடீரென தாக்க ஆரம்பித்துள்ளன.

இதில் அவருடைய வலதுகை கிழிந்து தொங்கியுள்ளது. மேலும் அவரது இடது கை, கால்கள் மற்றும் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுயநினைவிழந்த ஜோர்டனை வேகமாக மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள பொலிஸார், ஜோர்டன் உடல் விரைவில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்