கூகுள் மேப் காட்டிய வழி.. ஒரே இடத்தில் சிக்கிக் கொண்ட 100 கார்கள்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கொலாரடோ மாகாணத்தில் டென்வேர் விமான நிலையம் உள்ளது. இங்கு செல்வதற்கு சிலர் கூகுள் மேப்பின் உதவியை வெவ்வேறு இடங்களில் இருந்து நாடியுள்ளனர்.

ஆனால், குறைந்த நேரத்தில் விமான நிலையத்தை அடைய குறுக்குப் பாதையை கூகுள் மேப் காட்டியுள்ளது. அந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது.

எனினும், குறைந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால், கூகுள் மேப் காட்டிய வழியை 100 பேர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன் காரணமாக 100 கார்களும் ஒரே இடத்தில் சிக்கியுள்ளன.

அதன் பின்னர் தான் இது தவறான பாதை என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அங்கு வந்த மான்சிஸ் என்பவர் கூறுகையில், ‘கணவரை அழைக்க விமான நிலையம் வருவதற்காக கூகுள் மேப்பில், குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடினேன்.

இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகத்தான் தெரிந்தது, தவறான பாதை என்று’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ‘கூகுள் மேப்பில் ஒரு வழியை தெரிவு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...