வீட்டு படுக்கையறைக்குள் திருடன் வருவதாக நினைத்த தாய்.. உள்ளே நுழைந்த 18 வயது மகள்... பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கல்லூரியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்து தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த மகளை தாயே தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ohio மாகாணத்தில் வசித்து வரும் பெண்ணின் வீட்டுக்கு கல்லூரி முடிந்து அவரின் 18 வயது மகள் வந்தார்.

வீட்டுக்கு வருவதை முன் கூட்டி சொல்லாமலேயே, திடீரென இன்ப அதிர்ச்சி தரும் பொருட்டு மகள் வந்த நிலையில் திருடன் யாரோ ஊடுருவி விட்டதாகக் கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார்.

அப்போது உள்ளே ஒருவர் நுழைந்ததும் பாய்ன்ட் 38 ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் ஒருமுறை சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற மகள் என உணர்ந்த அவர் பதறித் துடித்தார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தாய் கூறுகையில், யாரோ திருடன் வீட்டுக்குள் நுழைவதாக நினைத்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனிடையில் அமெரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் துப்பாக்கிச் சூட்டில் 40 ஆயிரம் பேர் பலியாகினர்.

அவற்றில் 1112 பேர் தவறுதலாக சுடப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்