கருப்பு நிறப் பெண்ணால்... வெள்ளை நிறப் பெண்ணுக்கு நடந்தது என்ன? கமெராவில் பதிவான காட்சிகள்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் வெள்ளை நிற பெண் ஒருவர், கருப்பு நிற பெண்ணால் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறும் வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

குறித்த வீடியோவை ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணான Janae Garcia என்பவரே சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக் கிழமை நியூயார்க்கில் பொது இடத்தில், நான் அமர்ந்திருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், Svitlana Flom என்று கூறப்படும் வெள்ளை நிற பெண், பொலிசாரை பல முறை போனில் தொடர்பு கொள்கிறார். கருப்பு நிற பெண்ணால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாக்கப்படுவதாகவும், போலும் பேசுகிறார்.

இது உள்ளூர் நேரப்படி மாலை 6.15 மணி முதல் 7.31-க்குள் நடந்துள்ளது. அவர் என்னை அப்படி அணுகியது மட்டுமின்றி, தன்னை பொலிசார் அழைக்க வேண்டும் என்று நினைத்தார். நான் வசதியாக அங்கு உட்கார்ந்திருந்தேன்.

அவர் மிகவும் பயந்ததாக Janae Garcia குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

From 6:15pm - 7:31pm this woman, Svitlana Flom, artdefete felt the need to not only approach me but call the cops MULTIPLE TIMES ON ME!! She was too “Alarmed” that I was sitting “comfortably” in “her neighborhood!” The first call was because she THOUGHT I was smoking in public.. but by the 3rd call, it was bcuz I was “threatening her & her children !!” While giving my description, she exaggerated her story & made it seem like I was the aggressor. “THIS AFRICAN AMERICAN WOMAN IS ATTACKING ME AND MY CHILDREN!” She had tears that were off & on & she stated things like “She’s pulling the black card!” Then wanted me to walk to the boys w/ her 🤦🏾‍♀️🤡 I probably could have just walked away!! I probably should have kept my mouth shut right ?! NAHHH!! I couldn’t understand why she was so mad ! Like ummmm first of alllll I pay alllll mine over here Miss Lady !! 🙄 How you come over here just feeling sooooo privileged & soooo comfortable enough to tell me I should leave ?! You’re buggin !! NOT THIS ONE!! She wanted to be a victim soooo bad!! NOT ONE PERSON CAME TO HER AID!! MULTIPLE PPL witnessed the ordeal & just wanted to make sure I was ok! SHARE THESE VIDEOS AS MANY TIMES AS POSSIBLE !! #SvitlanaFlom @maisonvivinyc @huffpost @ariannahuff

A post shared by *Pretty Brown* (@_brownsugarbaby) on

அதில், ஒரு கட்டத்தில் Svitlana Flom நான் இதை எல்லாம் படமாக்குவதாகவும், அவள் என்னை ஒரு மாதிரி அழைப்பதாகவும் கூறுகிறார்.

அப்போது Janae Garcia, ஒரு குடியிருப்பை காட்டி இது எனது கட்டிடம், இது எனது அக்கம், பக்கத்தில் இருக்கும் பகுதி. நான் என் நேரத்தை அனுபவிக்க முயற்சிக்கிறேன், இந்த வெள்ளை பெண் என்னை மிகவும் சங்கடப்படுத்துவதாக கூறுகிறார்.

ஆனால், Svitlana Flom தொடர்ந்து பொலிசாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பூங்காவில் அவருடைய கணவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் பொலிசாரிடம் அழுத படி பேசுகிறார்.

Ms Garcia(Picture: @_brownsugarbaby)

தன்னை ஒரு இனவெறி போல தோற்றமளிக்கும் வகையில், அந்த வீடியோவை திருத்தப்பட்டதாக Svitlana Flom குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 29-ஆம் திகதி நியூயார்க்கின், 20-வது வட்டார எல்லைக்குள் ஒரு துன்புறுத்தல் இருப்பதாக அழைப்பு வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தவுடன், வாய் வழி சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சம்மனோ, கைதோ எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வீடியோவை பார்த்தவரை அந்த கருப்பின பெண் அவருக்கு எந்த ஒரு அச்சுறுத்தலை கொடுத்தது போல் தெரியவில்லை என்று இணையவாசிகள் பலர் கூறி வருகின்றனர்.

Mrs Flom(Picture: @_brownsugarbaby)

அதுமட்டுமின்றி சமீபத்தில், அமெரிக்காவில் கருப்பின நபரான George Floyd என்பவர் பொலிஸ் அதிகாரியால் கொல்லப்பட்டார்.

இதனால் அங்கு நாடு முழுவதிலும் பொலிசாரின் மிருகத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனவெறிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு பல மாகாணங்களில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதால், இது அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்