இரவில் வீடு புகுந்து முன்னாள் காதலியை கடத்தி சென்ற நபர்! அதற்கு முன்னர் செய்த பதறவைக்கும் செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் வீடு புகுந்து 14 வயது சிறுவனை கொலை செய்த நபர், தனது முன்னாள் காதலியை கடத்தி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சும்டர் கவுண்டியை சேர்ந்தவர் Samuel Marvin Thomas (48). இவர் இரவு நேரத்தில் தனது முன்னாள் காதலி Victoria Harris (33) வீட்டுக்குள் புகுந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த 14 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த Samuel, Victoria-வை காரில் கடத்தி சென்றுள்ளார்.

இது தொடர்பான புகாரில் பொலிசார் Samuel-ஐ கைது செய்ததோடு Victoriaவை பத்திரமாக மீட்டுள்ளனர்.

விசாரணையில் அவர் திருடிய காரில் Victoriaவை கடத்தியதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட Samuel மீது கொலை, கடத்தல், தப்பி ஓடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மேலும் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்