அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்! காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

Report Print Sujitha Sri in காலநிலை

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாக காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் இந்த நிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers