கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளை அச்சுறுத்தும் கடும் வெப்பம்! திடீரென ஏற்பட காரணம் என்ன?

Report Print Vethu Vethu in காலநிலை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவுதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்துடனான காலநிலை சில மாதங்களுக்கு நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகல் நேரங்களில் அதிக சூடான காலநிலை காணப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகில்கள் அற்ற வானம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக பூமியை தாக்குகின்றது. இதனால் பூமி சூடாகின்றது. அதன் வெப்பம் எமது உடலில் படும் போது அதிக உஷண் நிலையை உணர முடிகின்றது.

அதேபோன்று காற்று குறைவாக உள்ளமையும் இதற்கு பிரதான காரணமாகும். காற்று குறையும் போது அதிக வெப்ப நிலை ஏற்படுகின்றது.

இதே நிலைமை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை கடல் வழியாக கடக்கும் காற்றும் இலங்கையின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் 34 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், அனுராதபுரத்தில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், காலி, திருகோணமலை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்