நாப்கின் விளம்பரத்தில் ரத்தப்போக்கை ஊதா நிறத்தில் காட்டுவது ஏன்?

Report Print Printha in பெண்கள்

கருவுறுதல் நடக்காத போது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால், கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்.

இதனால், கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து, அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம் தான் மாதவிடாய்.

மாதவிடாய் சுழற்சியில் பெண்களின் உடலில் உள்ள அசுத்த ரத்தங்கள் மட்டுமே வெளியேறும்.

இந்த மாதவிடாய் சுழற்சியில் வெளியேறும் உதிரப்போக்கிற்காக பயன்படுத்தும் நாப்கின்களை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், அந்த நாப்கின் ரத்தத்தை உறிஞ்சும் என்று காட்டுவதற்கு பதிலாக ஊதா நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இயற்கையில் மாதவிடாய் ஏற்படும் போது, அது சிவப்பு நிறத்தில் தானே ரத்தம் வெளியேறும். இதைச் சிவப்பு நிறத்தை ஊற்றி பரிசோதனை செய்வதால், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லையே.

பின்பு ஏன் நாப்கின்களில் ஊதா நிறத்தைக் காட்டி விளம்பரப்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் நம் அனைவரது மனதிலும் ஏற்படும்.

மாதவிடாய் குறித்து ஆண்களுக்கு புரிதல்கள் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லையெனில், இந்த விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவ்வாறு காட்டிகின்றனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்