மாதவிலக்குக்கு இடையே ரத்தப் போக்கா? என்ன காரணமாக இருக்கலாம்?

Report Print Fathima Fathima in பெண்கள்

மாதவிலக்கு என்பதே பெண்களுக்கு வலி மிகுந்தது தான், அந்த மூன்று நாட்களில் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது.

இதற்கிடையே இரண்டு மாதவிலக்குக்கு இடையே ரத்தப்போக்கு வந்தால்... அதுவும் வேறொரு நிறத்தில் வந்தால் என்ன அர்த்தம்.

ஹார்மோன்கள் அடங்கிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிப்பவர்கள் இவ்வாறு வரலாம்.

மாத்திரை, பேட்ச், ஊசி என எந்த வடிவிலான குடும்பக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் அதை உபயோகிக்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் இப்படி இடையிடையே மாதவிலக்கு வருவது சகஜம்.

மருத்துவர்களிடம் சோதனை செய்து இதனை தெரிந்து கொள்ளலாம்.

  • ஒரு சில நேரங்களில் க்ளமிடியா எனும் பால்வினை நோயின் பாதிப்பாக கூட இது வரலாம்.
  • கர்ப்பப்பையின் உள் உறைகளில் தொற்று ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகலாம்.
  • ரத்தம் உறைவது தொடர்பான இந்தப் பிரச்சனையின் காரணமாகவும் இடையிடையே ரத்தப் போக்கு வரக்கூடும்.
  • இதற்கு முறையான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சைகளும் மேற்கொள்ளவது அவசியமாகும்.
  • ஹைப்போ தைராய்டு, கல்லீரல் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருந்தாலும் இப்படி இருக்கலாம்.
  • கர்ப்பப் பையின் உள் உறைகளில் ஏற்படுகிற ஃபைப்ராய்டு கட்டிகளும் இப்படி இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்கை ஏற்படுத்தலாம்.
  • கர்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.
  • மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்