காணாமல் போன மகளை கண்டுபிடித்தால் ரூ.45 லட்சம் பரிசு: பெற்றோர் கண்ணீருடன் அறிவிப்பு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் காணாமல் போன தங்களுடைய மகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெற்றோர்கள் உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மாண்டீரியல் மாகாணத்தில் உள்ள குயூபெக் நகரில் Marilyn Bergeron(24) என்ற இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

மாண்டீரியல் நகரில் பணி செய்து வந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு குயூபெக் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், வீட்டிற்கு திரும்பிய நாள் முதல் அவர் ஒருவிதமான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

பின்னர், அதே ஆண்டு பெப்ரவரி 17-ம் திகதி ஒருவிதக் கலக்கத்துடன் நடந்தே வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டை விட்டு போனவர் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இளம்பெண் காணாமல் போன விவகாரத்தில் பொலிசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மகளை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 10,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பெற்றோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

ஆனால், மகள் காணாமல் போய் தற்போது 7 ஆண்டுகள் ஆகியுள்ளதால் நேற்று பெற்றோர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது, ‘எங்களுடைய மகள் மீது உயிரையே வைத்துள்ளோம். அவரை விட்டுவிட்டு நாட்களை கடத்த முடியவில்லை.

மகளை கண்டுபிடிக்க ஏற்கனவே அறிவித்த 10,000 டொலர் சன்மானத்தை மூன்று மடங்காக அதிகரித்து 30,000 டொலர்(45,24,000 இலங்கை ரூபாய்) வழங்க தயாராக உள்ளோம்.

எனவே, தயவு கூர்ந்து தங்களுடைய மகளை கண்டுபிடிக்க உதவ வேண்டும்’ என பெற்றோர்கள் கண்ணீருடன் அறிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments