கனேடிய பிரதமருக்கு பிடித்த இலங்கை உணவு எது தெரியுமா?

Report Print Vethu Vethu in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் தயாரிக்கப்படும் கொத்து ரொட்டி மீது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஈர்ப்பு கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

டொரொன்டோவின் மிகப்பெரிய தெரு விழாக்களில் ஒன்றான தமிழ் திருவிழா நடைபெற்றது. 200,000 பேரின் பங்களிப்புடன் நடைபெற்ற திருவிழாவுக்கு கனேடிய பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Scarborough, Markham தெருவில் மக்கள் கூட்டத்தில் மத்தியில் சமைக்கப்பட்ட பல தமிழ் உணவுகளில் ஒன்றை சுட்டிக்காட்டி “கொத்து ரொட்டி சிறப்பாக வருவதனை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் குடியேறிய Newfoundland பகுதிக்கு கனேடிய பிரதமர் சென்றுள்ளார்.

தமிழர்களுக்கும் இலங்கை தீவின் சிங்கள பெரும்பான்மைக்கும் இடையிலான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போதிலும், 2010 ஆம் ஆண்டு கனடாவின் கரையோரங்களில் தஞ்சம் கோருவோர்களின் கப்பல்களின் வருகை அதிகரித்தது.

எனினும் இலங்கை நீண்டகால சமாதானத்தை இன்னும் அடைந்து விடவில்லை என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு நாள் கொண்டாட்டத்தின் போது தமிழ் கனடிய சமூகத்தின் சாதனைகளுக்கு கனேடிய அரசியல்வாதிகளும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்