ரஷ்ய பாலியல் உளவாளி என குற்றம் சாட்டப்பட்ட பெண் நிரபராதி: அகதிகள் வாரியம் தீர்ப்பு

Report Print Balamanuvelan in கனடா
79Shares
79Shares
lankasrimarket.com

கனடாவால் பாலியல் உளவாளி என குற்றம் சாட்டப்பட்ட ரஷ்யப் பெண், உளவு பார்க்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என்று தீர்ப்பளித்துள்ள புலம்பெயர்தல் மற்றும அகதிகள் வாரியம் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்துள்ளது.

ரஷ்யாவில் பிறந்த அமெரிக்க குடிமகளான Elena Crenna, ஒரு பாலியல் உளவாளி என கனடா குற்றம் சாட்டியிருந்தது.

புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் தனது தீர்ப்பில், Elena கனடா நாட்டு செயல்திட்டம்(Project) ஒன்றைக் குறித்து ரஷ்யாவின் FSB Federal Security Serviceக்கு தகவல் ஒன்றை அளித்ததாகவும், ஆனால் அவரது செயல் உளவு பார்த்தல் என்று சொல்லும் வகையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

1994க்கும் 1996க்கும் இடையில் Elena FSBயால் ஒரு பாலியல் உளவாளியாக பயன்படுத்தப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் கூறியுள்ளது.

Elenaவின் கணவரான David Crenna, தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அதே நேரத்தில் அரசு ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தங்களுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Canada Mortgage and Housing Corporation project என்னும் செயல்திட்டத்தில் Elena மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்தார்.

அந்த சமயத்தில் அவரைத் தொடர்பு கொண்ட Aleksander Dyomin என்னும் ஒரு நபர் Elenaவிடம் அந்த செயல்திட்டம் குறித்து சில தகவல்களைக் கேட்டுள்ளார். Elenaவும் அந்த Aleksander Dyominக்கு பதிலளித்துள்ளார்.

ஆனால் Aleksander Dyomin, FSB Federal Security Serviceஐச் சேர்ந்த ஒரு உளவாளி. தான் கொடுத்த தகவல்களுக்காக தான் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறும் Elena, Aleksander Dyominஇன் செல்வாக்கை பயன்படுத்தி அவளது வீட்டிற்கு ஒரு தொலைபேசி இணைப்பைப் பெற்றுத் தருமாறு மட்டும் கேட்டதாகக் கூறுகிறார்.

Aleksander, Elenaவிடம் குறிப்பிட்ட நபர்களிடமிருந்து தகவல்களை சேகரித்து தருமாறு கேட்கவில்லை என்றும் Elena எந்த தகவலையும் பதிவு செய்தோ எழுதியோ Aleksanderக்கு கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் கனடாவின் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்