16 பேரின் மரணத்துக்கு காரணமான இந்திய வம்சாவளியினர் கனடாவில் கைது

Report Print Balamanuvelan in கனடா
338Shares
338Shares
lankasrimarket.com

16 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாகிய விபத்தை ஏற்படுத்தியதற்காக 29 வயதுடைய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jaskirat Singh Sidhu என்னும் அந்த இளைஞர், Calgary நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர்மீது அபாயகரமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 16 குற்றச்சாட்டுகளும், காயம் ஏற்படுத்தியதற்காக 13 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் ஆஜர்படுத்தும் திகதி இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை.

ஏபரல் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த அந்த விபத்தில், ஹாக்கி போட்டி ஒன்றில் விளையாடச் செல்லும்போது Humboldt Broncos அணியைச் சேர்ந்த 10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதோடு, 13 பேர் காயமடைந்தனர்.

Sidhuவுக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிக்காக அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் Humboldt Broncos குழு இந்த வழக்கில் பொலிசாரின் பங்களிப்பிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்