இலங்கை வீரர்கள் போன்று நடித்தாரா? மொஹமட் சமி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியில் காற்றுமாசு என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை வீரர்கள் காற்று மாசை காரணம் காட்டி போட்டியை இடை நிறுத்த முனைந்ததுடன் , மூக்கை மறைக்கும் பாதுகாப்பு உறைகளை (Mask) அணிந்து களத்தடுப்பில் ஈடுபட்டனர்.

இதுபோட்டியின் போக்கை மாற்றுவதற்காகவும், நேரத்தை வீணடிப்பதற்க்காகவும் இலங்கை வீரர்கள் வேண்டுமென்றே நாடகமாடியதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தநிலையில்,இதன் இன்னோர் அங்கமாக வேகப்பந்து வீச்சாளர்களான லக்மால் மற்றும் கமகே ஆகியோர் வாந்தி காரணமாக மைதானத்தைவிட்டு வெளியேறியிருந்தனர்.

இந்தநிலையில் இந்திய வீரர் மொஹமட் சாமியும் இன்று மைதானத்தில் வாந்தி எடுத்தமை நிலைமையை தலைகீழாக்கியுள்ளது.

இலங்கை வீரர்கள் நடித்தார்களாயின் ,இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சாமியும் இன்றைய போட்டியில் நடித்தாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்