ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் இவர் தான்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
578Shares
578Shares
lankasrimarket.com

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகை வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி உள்ளார் அணித்தலைவர் விராட் கோஹ்லி.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.

இதற்கான ஏலம் இரண்டு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இதற்கான ஒப்பந்தம் நேற்று போடப்பட்டு எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்கிறார்கள் என்பது உறுதியானது.

பெங்களூரு றொயல் சேலஞ்சர்ஸ் அணி விராட்கோஹ்லியை 17 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகையில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

கோஹ்லிக்கு அடுத்தபடியாக டோனி, ரோஹித் சர்மா ஆகியோரை 15 கோடி ரூபாய்க்கு முறையே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்