அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு இலங்கை?

Report Print Sujitha Sri in கல்வி
155Shares
155Shares
lankasrimarket.com

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சகல பாடசாலைகளிலும் தரம் ஆறு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் கல்வி நடவடிக்கைகள் தொழிநுட்ப ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழிநுட்ப ரீதியில் முன்னெடுப்பதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களை விடவும் இலங்கையின் கல்வித் துறையானது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில் வெளிநாடுகளின் உதவியுடன் கல்விக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்